ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம்?

கடந்த வார இறுதியில் வாக்னரின் படைகள் ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைக் கைப்பற்றியபோது உலகமே அதிர்ச்சியடைந்தது. இது உலக மசகு எண்ணெய் சந்தையையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இன்று (26) மசகு எண்ணெய் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ரஷ்ய ரூபிளின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. கூலிப்படை தாக்குதல்கள் ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மலையக வீடமைப்பு திட்டம் – விசேட கலந்துரையாடல்

மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பங்குபற்றலோடு நடைபெற்றது. அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் அதிகாரிகள் […]

இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு…

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றில் B குழுவின் கீழ் போட்டியிட்ட இலங்கை, ஸ்கொட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் சுப்பர் 6 சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. குரூப் ஏ கீழ் போட்டியிட்ட மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் சிம்பாபே அணிகளும் சூப்பர் 6 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்படி இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து, சிம்பாபே ஆகிய அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு தெரிவாகின. உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான தகுதிச் […]

யார் இவர்கள்?

வாக்னர் கூலிப்படை பிரிவு என்பது ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் சுமார் 25,000 வீரர்களைக் கொண்ட குழுவாகும். அவர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அரசாங்கத்தை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தனியார் இராணுவ நிறுவனம் என அறியப்படும் ரஷ்ய சார்பு வாக்னர் கூலிப்படை குழு முதலில் 2014 இல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரகசியமாக நடத்தப்பட்ட வாக்னர் குழு பல ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் சிரியா, லிபியா, மாலி உள்ளிட்ட 6 […]

‘அஸ்வெசும’ – பயனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பபடாது

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் […]

டெங்கு:விசேட சுத்திகரிப்பு- சுகாதார இராஜாங்க அமைச்சர்

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி ஒரு வாரத்திற்கு நுளம்பு குடம்பிகளை கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவலைக் […]

வாக்னர் படைகளுக்கும் புடினுக்கும் இடையே இணக்கம்

வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வாக்னர் அமைப்பு ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது. 50 சதவீதம் ராணுவ வீரர்கள் தங்களுடன் ஆதரவாக இருப்பதாகவும், மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்தது. ஏற்கனவே உக்ரைன்கு எதிராக போரிட்டு வரும் நிலையில், உள்நாட்டில் ஆயுத கிளர்ச்சி […]

சுகாதார வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது முதன்மை நோக்கம் 

அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  வழிகாட்டலின் ஊடாக பெருந்தோட்ட மனித வள  அபிவிருத்தி நிதியம் மற்றும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி உதவியில் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நுவரெலிய மாவட்டத்தில் 7758 பேர் உள்ளடங்கிய  2288  வீடுகளுக்கு 1021 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ்வேளை திட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது. […]

சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்

(க.கிஷாந்தன்) பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராகவும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். திடீரென பொகவந்தலாவ நகரில் களமிறங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் சம்பவ இடத்துக்கு அழைத்தார். கைது செய்யப்பட்ட இளைஞர் தரப்பில் உள்ள நியாயத்தை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்த ஜீவன் தொண்டமான், […]

சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற நாடுகள்

மேற்கிந்திய தீவுகள், நெதர்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் சிம்பாபே ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்று சிம்பாபேயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் 02 பிரிவுகளின் கீழ் 10 அணிகள் களமிறங்கியுள்ளதுடன், போட்டி கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.