உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யா
அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்” பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்றிரவு மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. அத்துடன், அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல அவை ஏவப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஒரு சிறிய வெடிப்புடன் கிரெம்லினில் ஏதோ […]
அமெரிக்க வட்டி விகிதங்களில் எதிர்பாராத மாற்றம்
அமெரிக்க மத்திய வங்கி நாட்டின் வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் நாட்டில் இதுவே அதிகபட்ச வட்டி விகிதமாகும். இதன் விளைவாக 14 மாதங்களில் அமெரிக்காவில் 10வது கட்டண உயர்வு இதுவாகும்.
திராவிட மொடல் ஆட்சி என்பது காலாவதியான அரசியல் கோஷம்
திராவிட மொடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு தருணங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மொடல் கொள்கையை கடுமையாக சாடியுள்ளார் ஆளுநர் ரவி. ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், “திராவிட மொடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை […]
‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் (PHOTOS)
கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (03) ஆரம்பமானது. புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. […]
மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது
மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
9 பேரைக் கொன்ற ஆரம்பப் பாடசாலை மாணவர் பற்றிய மேலும் தகவல்கள்…
சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி அதே ஆரம்ப பாடசாலையில் கற்கும் 13 வயது மாணவனே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் 8 சிறுவர்கள் உட்பட பாடசாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர். சந்தேகத்திற்கிடமான பாடசாலை மாணவர், துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் படுகொலைத் திட்டம் ஒன்றை தயாரித்திருந்தமை தெரியவந்துள்ளதாக […]
வெசாக்:விசேட போக்குவரத்து சேவைகள்
வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாளை(05) மற்றும் எதிர்வரும் 07ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்தார். இதேவேளை, இன்று(04) முதல் விசேட பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இருந்து வௌி மாகாணங்களுக்கும் வௌி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கும் இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்கள்…
உலகில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிவித்துள்ளது. 2023 இல் சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அவர் அதிக வருமானம் ஈட்டும் வீரர் ஆனார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், பிரான்ஸ் கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கடந்த 12 […]
நான்கு வருடங்களின் பின்னர் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை
நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. இந்த ஆளும் சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட 07 உறுப்பினர்களைக் கொண்டது. வண, கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரும் நியமிக்கப்பட்ட உறுப்பினராக செயற்படுகின்றார். நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த ஆளும் சபை கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் […]
3,000 மாணவ மாணவியருக்கு ஜனாதிபதி புலமைப்பிரிசில்….(Photos)
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் […]