14 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி

14 வயதுடைய செர்பிய மாணவர் ஒருவர் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 மாணவர்களும் பாடசாலை காவலரும் கொல்லப்பட்டனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நவீன தொழில்நுட்ப கண்காட்சி

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நவீன தொழில்நுட்ப கண்காட்சி இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரியில் ஆரம்பமாகியது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், […]

முதலீட்டாளர்களுக்கு வசதியாக 07 செயலணிகள்

நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது […]

நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் காலமானார்.

இப்படித்தான் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படும்

லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 100 ரூபாவால் குறைக்க லிட்ரோ கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் புதிய விலை 3,638 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் கொண்ட வீட்டு சமையல் எரிவாயு ஒன்றின் விலையை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் […]

விவசாயிகளுக்கு போதுமான உரம்…

விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா மற்றும் இதர உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மோதிக் கொண்ட கோலி – கம்பீர்

IPL  தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிரிக்கெட் அரங்கில் இது பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு BCCI இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. IPL தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் […]

வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

இந்திய நிதியமைச்சருடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த கலந்துரையாடல் தென்கொரியாவில் நடைபெற்றது. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அலி சப்ரி ஆகியோர் தென் கொரியாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 56வது ஆண்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும், விசேட பொதி

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் எதிர்காலத்தில் விசேட பொதி ஒன்றை அறிமுகப்படுத்த ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தன்சல்களை பார்வையிட 3000 பொது சுகாதார பரிசோதகர்கள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெறும் தன்சல்களை பார்வையிட 3000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் உபுல் ரோஹன , தன்சல் ஒன்றை நடத்துவதற்கு  கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.