IMF – அதிர்ச்சி தகவல்
உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை: 2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும். ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து […]
தேசிய வெசாக் வாரம்
தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி
அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி […]
நுவரெலியாவில் கட்டுமானத்திற்கு வரையறையாம்
நுவரெலியா மாவட்டத்தில் 04 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் […]
பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டம்…
ஓய்வூதிய மறிசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 291 பேர் அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர. பிரான்ஸ் ஜனாதிபதியின் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே தினத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பேரணியில் பங்கேற்றிருந்தனர். ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கினர், […]
‘பேச்சின்படி நடந்து காட்டுங்கள்’ – ரணிலுக்கு மனோ வலியுறுத்து
“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி நான்காம் திகதியளவில் தீர்வு காண்போம் என்றும் கூறினீர்கள். இப்போதும் மீண்டும், மீண்டும் கூறுகிறீர்கள். இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் தொடர்பான இனப்பிரச்சினை தொடர்பில், உங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார். ஆனால், இனி நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள். “வோக் யுவர் […]
பசறை-நமுனுகுல வீதியில் போக்குவரத்து தடை
மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகல மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலைமைகளின் கீழ், […]
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். UNP மே தினப் பேரணியின் தொனிப்பொருளானது ‘2048 ஜயகமு’ என்பதாகும்.
விலை மாற்றம் நாளை- லிட்ரோ நிறுவனம்
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.