“வலுவான முகாம்” : சஜித் அழைப்பு

புன்னகைக்கு பதிலாக கண்ணீரையும் ஜனநாயகத்திற்கு பதிலாக பயங்கரவாதத்தையும் ஒடுக்கு முறைகளையும் மக்கள் மீது அரசாங்கம் சுமத்தியுள்ள நிலையில் இம்முறை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார். நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கை அதள பாதாளத்திற்கு தள்ளப்படுவதுடன் பெரும்பாலான மக்களுக்கு தொழில் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படைவாதம், இனவாதம், பயங்கரவாதமற்ற சிறப்பான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரேயொரு சக்தியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் வலுவான முகாமை கட்டியெழுப்ப […]

‘ப்றொடெக்ட்’ போராட்டம்

(க.கிஷாந்தன்) மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில் இன்று நடைபெற்றது. அட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் மே தின கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ‘உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். […]

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின நிகழ்வு

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக தொழிற்சங்க துறவியென போற்றப்படும் வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே அச்சங்கம் உருவாக்கப்பட்டது. சி.வி. வேலுபிள்ளை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்படி சங்கத்தில் அங்கம் வகித்தனர். தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தற்போது பழனி திகாம்பரம் தலைமை […]

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும்

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின பேரணியும், கூட்டமும் இன்று ஹட்டனில் நடைபெற்றது. ஹட்டன் கார்கில்ஸ் புட்சிட்டிக்கு முன்பாக சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னியாராச்சி தலைமையில் ஆரம்பமான மே தின பேரணி, அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபம் வரை சென்றடைந்தது. அதன்பின்னர் மே தின கூட்டம் நடைபெற்றது. இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், உப தலைவர் உட்பட அங்கத்தவர்களும், ஏனையோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். தொழில் பாதுகாப்பு, வாழ்வுரிமை உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தியே மே […]

தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை  எளிமையான முறையில் –  உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. அந்தவகையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றது. அட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் […]

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், பெட்ரோலின் விலையை 7 ரூபாவால் குறைப்பது கட்டணத்தை மாற்றுவதற்கு போதாது என தெரிவித்துள்ளார்.

CWC உங்களுடன் – ஜீவன்

” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகள் என்ற பண முதலைகளும், உழைப்பை சுரண்டிய அதிகார வர்க்கமும் அடக்கி ஆண்ட யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போல, அவர்கள் உழைப்பால் உயர்ந்து உச்சம் தொடுவதற்கு என்றும் நாம் பக்கபலமாக இருப்போம். உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்போம்.”   – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள மேதின வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

மலையகத்தில் அடை மழை…

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா – கந்தபளை பகுதிகளில் கடும் மழை காரணமாக பெருமளவான மரக்கறி தோட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய காணிகள் மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோடு, தோட்டங்களை அண்டிய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்ததையும் காணக்கூடியதாக […]

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்: அரவிந்தகுமார்

நாட்டின் தேசிய வருமாaaனத்தின் பங்காளிகளான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது அதனையே நாமும் வலியுறுத்தி நிற்கிறோம். அடுத்து வரும் ‍மேதினமானது மலையகத்தில் மாற்றங்களை ஏபடுத்தியிருக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மேதினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவளியினராக […]

கீதாவுக்கு ஜனாதிபதி அறிவுரை

இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Women Plus Bazaar 2023” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் ஆரம்பமானது. கொழும்பில் உள்ள எகிப்து அரபுக் குடியரசு தூதரகம், கொழும்பு மாநகர சபை மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள்பேரவை ஆகியவை இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் 200இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களைக் […]