ஈக்குவாடோரில் துப்பாக்கிச் சூடு 10 பேர் பலி…

ஈக்குவாடோரின் துறைமுக நகரமான குயாகுவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். 5 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது மற்றும் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகரத்தில் அதிகரித்து வரும் வன்முறையைத் தடுக்க, ஈக்குவாடோர் அரசாங்கம் ஏப்ரல் தொடக்கத்தில் குவாயாகில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் […]

நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா? – பலகோணங்களில் விசாரணை

தலவாக்கலை  மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 35ற்கும் […]

உழைக்கும் மக்களுக்கு நன்றி

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் திரண்டு 8 மணி நேர பணி மாறுதல் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 137 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளர் உரிமைகளுக்காக மாபெரும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பல நாட்கள் நீடித்த போராட்டங்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டன, அங்கு ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, கொழும்பு மற்றும் கண்டி நகரங்களை அண்மித்த பகுதிகளில் […]

ஏழை மக்களுக்கு நிவாரணம்…

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2022/2023 பெரும் […]

IOC – எரிபொருளின் விலையில் திருத்தம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய […]

சூரிய ஔி உடலுக்கு அவசியம்

நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். விட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சூரிய ஔியின் மூலமே மனித […]

“டெங்கு…”

நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் சூடான் மோதல்…

சூடானில் சட்டவிரோத ஆயுத,குழுக்களுக்கும் சூடான் இராணுவத்திற்கும் இடையிலான மோதல்கள் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. பல சந்தர்ப்பங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், நாட்டின் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மோதல்கள் தொடர்கின்றன. வன்முறை மோதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரசாங்கத்தின் ஆதரவுடன் தற்போது சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கையில் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. சூடானில் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், வெளிநாட்டினரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று […]

மீண்டும் காலி இலக்கிய விழா

பல வருடங்களாக நடைபெறாத, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலக்கிய விழாவான காலி இலக்கிய விழாவை (Galle Literary Festival) சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் மீண்டும் பிரமாண்டமாக நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையாக, பல்வேறு கலை அம்சங்கள் அடங்கிய தொடர் நிகழ்ச்சிகளை காலி, மாத்தறை, அஹங்கம மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. […]

இலங்கைக்கு எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கைக்கு எதிர்காலத்தில் சீனாவின் ஆதரவை தொடர்ந்தும் கிடைக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹாங்க் கூறியுள்ளார். கண்டி ஸ்ரீ சந்தானந்த வித்தியாலயத்தில் நேற்று (28) இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.