மலையகம் – “200”

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க […]

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்- சிறை பிடித்துள்ள படகுகளை விடுவிக்க கோரிக்கை

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை பஸ் நிலையம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க செயலாளர் ஜேசு ராஜா, மீனவர் சங்கத் தலைவர்கள் தேவதாஸ், எமரிட், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனே விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு அருகே அச்சமின்றி மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி […]

இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்…

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் […]

கடன் சுமையில் இருந்து மீள நடவடிக்கை

உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 2021-2022 […]

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைய, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் பெருமளவில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதி அமைச்சர், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என கூறினார். நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்பவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதாகவும் பலரதும் கருத்துகளைப் பெற்று, தேவையான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் […]

ரஷ்யாவிலிருந்து கடுமையான தாக்குதல்கள்…

உக்ரைனின் பல முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, சில பகுதிகளில் ரஷ்யாவும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

எளிமையான முறையில் மேதின நிகழ்வுகள் – CWC

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமது கட்சியால் – தொழிற்சங்கத்தால் வருடாந்தம் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் பிரதான மேதின பேரணியும், கூட்டமும் இம்முறை நடத்தப்பமாட்டடாதென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனினும், தோட்டவாரியாக மிகவும் எளிமையான முறையில் மேதின நிகழ்வுகளை நடத்துமாறு தோட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடக்கூட்டம் கொட்டகலையில் உள்ள சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (28)  கூடியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் […]

மாணிக்ககற்கள் தோண்டிய ஆறு பேர் கைது

அட்டன் ஊடாக மகாவலி ஆற்றுக்கு நீரேந்தும் அட்டன்ஓயாவை அண்மித்த காட்டுப்பகுதியில்  அனுமதியின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை தோண்டி சுற்றாடலை மாசுப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 06 ந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.என்.தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், அட்டன் ஸ்டெதன் தோட்டத்திற்கு அருகாமையில் அட்டன்ஓயா அண்மித்த காட்டுப்பகுதியில் மாணிக்கக்கற்களை தோண்டிய சந்தேக நபர்களை சுற்றிவளைத்ததுடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியதாக தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அதே தோட்டத்தில் […]

அயர்லாந்தை அழ வைத்த இலங்கை

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. […]

உணவு ஒவ்வாமை மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமை காரணமாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (28.04.2023) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. எந்தவொரு மாணவருக்கும் ஆபத்தான நிலையில்லையெனவும், பெரும்பாலான மாணவர்கள் இன்று (28.04.2023) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளாசோ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 5வரை 126 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. பாடசாலை நிர்வாகத்தாலேயே சமையல் பணி முன்னெடுக்கப்படுகின்றது. […]