நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இறுதியில், பாகிஸ்தான் […]
தவறான ஆலோசனைகளினால் தவறான தீர்மானங்கள்
இரசாயன உரத் தடைக்கு எதிராகப் பேசிய தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M சந்திரசேன தெரிவித்துள்ளார். சிலர் வழங்கிய தவறான ஆலோசனைகளினால் தவறான தீர்மானங்கள் எட்டப்பட்டதாக அவர் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்தார்.
நெடுந்தீவு கொலை – 6வது பலி
யாழ்.நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறித்த […]
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட விசேட வாகனங்கள்
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன. கடலோர மற்றும் குளம் சார்ந்த பகுதிகள் மற்றும் எந்த கரடுமுரடான நிலப்பரப்பிலும்(Combat All Terrain Vehicle) கடற்படை நடவடிக்கைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள், கொழும்பு மற்றும் மன்னார் கடற்பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு […]
தோட்டப்பகுதிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுரை
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்ட மறுசீரமைப்பு குழுவுடன் (PRC) ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காணிப் பிரச்சினை உட்பட விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு, தற்போது தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்ற மகாவலி காணிப் பிரச்சினை […]
சூடான் மோதலில் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்
சூடானில் இடம்பெற்ற மோதலின் போது இரண்டு அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டில் தங்கியுள்ள சில அமெரிக்கர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கிர்பி தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் நாட்டுக்கு செல்வதற்காக ஏற்கனவே சூடான் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போர்நிறுத்த காலத்தை நீடிப்பதில் அமெரிக்க அரசு தலையிடும் என்றும் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.
நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற சந்தேகநபர் கைது
அட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொலிஸாரினால் இவர் 26.04.2023 அன்று மாலை அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி (அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடவில்லை) கித்துல்கல பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு கொண்டு செல்லும் போது அட்டன் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பின் கைப்பற்றப்பட்ட மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் அட்டன் பொலிஸ் நிலையத்தில் அட்டன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். சந்தேகத்தின் […]
CWC ஆதரவாக வாக்களிக்கும்
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை, அமைச்சர் மனுஷ நாணயக்கார சபையில் ‘புலி’ (கொட்டியா) என விளித்ததையும் அமைச்சர் கண்டித்துள்ளார். அமைச்சில் (27.04.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். […]
தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் துரைசாமி விஜிந்த் மூன்று பதக்கங்கள் சுவீகரிப்பு
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக சென்ற நுவரெலியா மாவட்ட பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜிந்த் இண்டு தங்கப்பதக்கங்கள் ஒரு வெள்ளிப்பதக்கம் அடங்கலாக மூன்று பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளார். வேகநடை போட்டி மற்றும் பரிதிவட்டம் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கமும் சுற்றி எரிதல் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் வெற்றி பெற்றுள்ளார்.குறித்த போட்டியில் இலங்கை உட்பட இந்தியா,பூட்டான்,பங்களாதேஷ்,நேபாள் போன்ற நாடுகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கை…
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 04 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 08 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது […]