சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை – UN

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” என்று […]

மண்சரிவு அபாய எச்சரிக்கை

 நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் எஹலியகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) 2 மணிக்கு பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் […]

இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகள்

உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் இராணுவத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்ட […]

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க குடியரசிற்குள் பிரவேசிப்பதற்கு தடை

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. வசந்த கரன்னாகொட கடற்படைத் தளபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து, வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க குடியரசிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு குறைந்துள்ளது – சுகாதார அமைச்சர்

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நிலைமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் நாட்டில் மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் கூறினார். குறிப்பாக […]

கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளது

கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த யானைகளின் மரணங்களில் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், ஏற்பட்டுள்ளன. காட்டு யானைகளின் தாக்குதலினால் இந்த வருடத்தின் கடந்த நான்கு […]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை  மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் வௌியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது […]

ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியை…

யாழ். நெடுந்தீவில்  வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரது இறுதிக்கிரியைகள் இன்று (26) நடைபெற்றன நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான சுப்பிரமணியம் மகாதேவாவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன. 75 வயதான சுப்பிரமணியம் மகாதேவா ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி – கணேசபுரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருநகர் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். […]

சூடானில் தொடர்ந்து பதற்றமான சூழல்

கடந்த 4 நாட்களில் 4,000க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையைச் சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை விமானம் மற்றும் கடல் மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார மோதல் தற்போது […]

இலங்கை இன்று மறுமலர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்துள்ளது

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் மீண்டும் பிரவேசித்து வருவதாகவும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முழு நாட்டின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட அரச வங்குரோத்து நிலைமை வீழ்ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்தை 8 மாதங்களில் மாற்றியமைத்து வெற்றிகரமாக மாற்ற முடிந்ததாகவும், அது ‘Srillnka comeback story ’ என அழைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை இன்று (26) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி […]