இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் விரைவில்…

2019 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத் தின் காலப்பகுதியில் இரண்டாம் மொழி ஆசிரியர்களாக நியமனம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட 1200 பேருக்கு உடனடியாக நியமனங்களை பெற்றுக்கொ டுப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஸ் குணவர்தனவை அறிவுறுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும்தரப்பு கூட்டத்தின்போது இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருந்தேன். இதனையடுத்தே ஜனாதிபதி […]

கொவிட் பற்றிய புதிய தகவல்

நேற்று (25) நான்கு பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை

உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவுப் பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பணவீக்கம் அதிகரித்தபோது, ​​உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் இருந்தது

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்

மேல் மாகாணத்தில் இன்று (26) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் நிலவும் டெங்கு நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 27800 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

WhatsAppல் மாற்றம்

ஒரே WhatsApp கணக்கை நான்கு போன்கள் வரை பயன்படுத்தும் வசதியை பயனர்களுக்கு வழங்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படிWhatsApp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே போனில் மட்டுமே பயன்படுத்த முடியாது. எதிர்காலத்தில் புதிய அனுபவத்தை அனுபவிக்க தயாராகுமாறு மெட்டா நிறுவனம் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

என்னைத் தாக்குவது நியாயமற்றது – மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், தன் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று காலை சகல வர்த்தக நிலையங்களையும் மூடி வர்த்தக சமூகம், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புடன் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் அந்தவகையில்  யாழ்ப்பாணத்திலும் ஹர்த்தாலுக்கு  பூரண ஆதரவை மக்கள் வழங்கியுள்ள நிலையில் ,    மக்கள் நடமாட்டமின்றி நகரங்கள்  வெறிச்சோடிக் […]

கல்வி முறையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (25) காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி […]

LPL : இதோ வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள்

நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை LPL அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் கீழே, மேற்கிந்திய தீவுகள் – டுவைன் பிராவோ, கீரன் பொல்லார்ட், ஜென்சன் சார்லஸ் மற்றும் ஆஷ்லி நர்ஸ் நியூசிலாந்து – மிட்செல் சான்டர், இஷ் சோதி, டிம் சிஃபட், டாரில் மிட்செல் […]

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில்

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி இன்று (25) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளது. அவர்கள் மூன்று T20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர், அந்த போட்டிகள் SSC மைதானத்தில் தில் நடைபெற உள்ளன. மேலும், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொழும்பில் சி.சி.சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் போட்டிகள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கு நேரடியாகப் பொருந்தும் எனவும், போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறுவதாகவும் இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.