போர்க்களம் சென்ற மகன்

ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரின் மகனும் உக்ரைனுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் மகன் இவ்வாறு போர்க்களத்தில் இறங்கியுள்ளார். நிகோலாய் பெஸ்கோவுக்கு இப்போது 33 வயது. பக்மவுத் பகுதியில் அவர் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. நிகோலாய் பெஸ்கோவ் பிரிட்டனில் படித்தவர். சிறப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய நிகோலாய் பெஸ்கோவ், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து […]

புதிய கல்விக் கொள்கை

அடுத்த 25 வருடங்களுக்கு தேசிய கல்விக் கொள்கை மற்றும் அது தொடர்பான சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் பங்களிப்புடன் 10 பேர் கொண்ட உபகுழு நியமிக்கப்படவுள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான செயற்பாட்டின் போது அவசரமாக சீர்திருத்தப்பட வேண்டிய முக்கிய துறையாக கல்வித்துறையை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் புதிய கல்விக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்த […]

நுவரெலியா தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்தில் 4 மாடிகளுக்கு மேல் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பது மே 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சர்கள் சபையில் அங்கீகாரம் வழங்கி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முறைசாரா அபிவிருத்தி காரணமாக நுவரெலியா நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருவதாகவும் இது சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்தார்

கல்வி அமைச்சு அறிக்கை

பாடசாலைகளில் தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், கிடைக்கக்கூடிய வெற்றிடங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கு பாடசாலைகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாடசாலைகளின் […]

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில் குண்டு வெடிப்பு – 12 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள பயங்கரவாத தடுப்பு அலுவலகத்தில் நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 12 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அலுவலகத்திற்கு வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மின் கசிவு காரணமாக வெடிமருந்துகள் தீப்பிடித்ததால் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று ஹர்த்தால்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடகிழக்கு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று (25) ஹர்த்தால் பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து இந்த ஹர்த்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பிர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு – கிழக்கு ஹர்த்தால் இயக்கம் காரணமாக அந்த பகுதிகளில் தனியார் பேருந்துகளும் தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இன்றைய பொது முடக்கத்துக்கு […]

யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு நிதி நன்கொடை

கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.

“கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் (Photos)

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் கித்சிறி ராஜபக்ஷவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கித்சிறி மேலா” புத்தாண்டு நிகழ்வுகள் நேற்று (23) டீன்ஸ் வீதிச் சந்தியில் இடம்பெற்றன. இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றதோடு, புத்தாண்டு அழகியாக தெரிவுசெய்யப்பட்ட ஹஷினி சமுதிகா, இரண்டாம் இடத்தைப் பெற்ற செனுகி ரதீஷா, மூன்றாம் இடத்தைப்பெற்ற லக்‌ஷிகா இஷாரா ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து பரிசுகளை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து சைக்கிளோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் […]

உலக அளவில் போருக்கான செலவினம் உயர்வு

உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக உலக அளவில் போருக்கான செலவினம் உயர்ந்துள்ளது. உக்ரைனின் இராணுவச் செலவு கடந்த ஆண்டு 640 சதவீதம் அதிகரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அவர்கள் போருக்காகச் செலவிட்ட மிக அதிக செலவு இது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் போர்ச் செலவுகள் மிகவும் பாதுகாப்பற்ற உலகத்தை உருவாக்கியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 30 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த இராணுவ செலவினமாகும்.

சஜித் தலைமையில் புதிய கூட்டணி

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்க எதிர்க்கட்சிகளின் அனைத்துக் கட்சிகளும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற இது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கூட்டணி அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை […]