ஐவர் படுகொலை:சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீடொன்றில் வைத்து மூன்று வயோதிப பெண்கள் உட்பட ஐவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். சந்தேகநபரான 51 வயதுடைய நபரிடம் இருந்து மூன்று தங்க நெக்லஸ்கள், இரண்டு ஜோடி தங்க வளையல்கள், தனி வளையல் ஒன்று, 8 மோதிரங்கள், இரண்டு காதணிகள் […]
ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள் இலங்கையில…
ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன்படி, இலங்கையில் வயது வந்த ஒவ்வொரு நால்வரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது, இது 23% வீதமாகும். கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதாரக் கொள்கை நிறுவனம் மற்றும் கொழும்பு, ருகுணு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள முதியவர்களில் மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், இது […]
நுவரெலியா – ராகலை வரை விரைவில் புதிய ரயில் பாதை
நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து நுவரெலியா மற்றும் ராகலை வரை பயணிக்ககூடிய புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா, நானுஓயா பகுதிக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார். ” நுவரெலியா நகருக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரயில் சேவை தேவையாக உள்ளது. எனவே, மத்திய மாகாண ஆளுநர் காலத்தில் செயற்பட்ட நுவரெலியா – கந்தபளை ரயில் […]
டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்த தாய் பலி
குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் 22.04.2023 அன்று மாலை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் […]
கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது
யாழ்ப்பாணம் நெடுந்தீவு மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொலைகளுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை அல்லது எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,கூறினார். யாழ்ப்பாணம் நெடுந்தீவு மாவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த மற்றுமொரு பெண் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் […]
பாடசாலை போக்குவரத்து சங்கம் எடுத்துள்ள முடிவு
மே 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கே.ஹரிச்சந்திர பத்மசிறி 5% – 8% வரை கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
டெவோன் நீர் வீழ்ச்சியில் குதித்த நான்கு பிள்ளைகளின் தாய்
குடும்ப தகராறு தொடர்பில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யவந்த தாயொருவர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்து காணாமல் போயுள்ளார். திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகாவத்தை பகுதியில் வசிக்கும் லெட்சுமனன் நிஷாந்தினி (வயது – 34) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குடும்ப தகராறு தொடர்பில் முறையிடுவதற்கு இரு பிள்ளைகள் சகிதம் இவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். முறைப்பாடு செய்ததையடுத்து ஒரு பிள்ளை சகிதம் […]
GL சட்ட நடவடிக்கை எடுக்க திட்டம்
இன்று (22) நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார் ஒரு அறிக்கையை வெளியிடுகையில், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாது மற்றும் செல்லுபடியாகாது என்று உறுப்பினர் கூறுகிறார். இதேவேளை, அந்த தீர்மானங்களை சட்டவிரோதமானது என அறிவிக்க உரிய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிடுகிறார்.
SLPPக்கு புதிய தலைவர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக […]
மலையகத்தில் நோன்பு பெருநாள்
ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் மலையகத்தில் […]