பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள்
கட்டார் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண்கள் கட்டாரில் பணம் தருவதாக கூறி 6 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 31 வயதுடையவர்கள்.
இந்திய பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் இல்லை…
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 500 பஸ்களில் இயந்திரக் கோளாறுகள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் அறிவிக்கவில்லை என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள டிப்போக்களுக்கு இந்திய கடன் உதவித் திட்டத்தின் மூலம் புதிய பஸ்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
முட்டைகளை விற்பனை செய்ய கட்டுப்பாட்டு விலை
எடை அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சிவப்பு நிற (பழுப்பு முட்டை) யின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாவாகும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. […]
வரிசையாக சடலங்கள்…
ஏமன் தலைநகர் சனாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர். ரமழான் பண்டிகைக்காக சனா மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் கூறப்படுகிறது. சன நெரிசலில் சிக்கி 322 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இது குறித்து ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் […]
மாணவர்களை பணயக் கைதிகளாக்க இடமளியேன்
எந்தவொரு குழுவினரும் பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக பயன்படுத்த இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பிலான பகுப்பாய்வுக் கூட்டம் இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியான சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கடந்த வருடம் […]
இதோ…உலகின் பணக்கார நகரங்கள்…
அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மீண்டும் உலகின் பணக்கார நகரமாக தெரிவாகியுள்ளது. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க நகரத்தில் தற்போது 340,000 கோடீஸ்வரர்கள் வாழ்கிறார்கள், மேலும் பில்லியனர்களின் எண்ணிக்கை 58 என்று கூறப்படுகிறது. உலகின் பணக்கார நகரங்களில், 290,300 மில்லியனர்கள் வசிக்கும் ஜப்பானின் டோக்கியோவுக்கு இரண்டாவது இடம கிடைத்துள்ளது. மேலும் 285,000 மில்லியனர்கள் வசிக்கும் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. உலகின் 10 பணக்கார நகரங்களில் லொஸ் […]
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மற்றும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கான அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் திகதியும்இ இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் ஜூன் 16 ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அதன்படி பேட் கம்மின்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வோனர் அணியில் இடம்பிடித்துள்ளார். இதனிடையே […]
ரெண்டு பேருக்கும் கமடியா?
ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம் வினவிய போதும், அவர்கள் அதனை அறிந்திருக்கவில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அழிந்து வரும் உயிரினங்கள், தாவரங்களின் […]
எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் எந்தவித முடிவும் இல்லை
ஏப்ரல் 25ம் திகதி நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனொ கணேசன் அறிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள மின்னஞ்சலில்… இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது. ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது […]
கர்தினாலுக்கு அதிகாரம் இல்லை-மைத்திரி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ அதிகாரம் உண்டு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாறாக கர்தினாலுக்கு எநந்த வித அதிகாரமும் இல்லை என அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கருத்தை கூறியுள்ளார்.