சீன மருத்துவமனையில் தீ: விசாரணைக்கு உத்தரவு

பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணைக்கு சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அங்கு 21 பேர் உயிரிழந்தனர். தீ பரவியதால் கட்டிடத்தில் இருந்து சிலர் போர்வைகளை பயன்படுத்தி வெளியே குதிக்க முயற்சிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறன். நேற்று (18) மதியம் 01 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்இ தீயணைப்புத் திணைக்களம் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கு […]

நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளிpன் வருகை இலக்கை எட்ட முடிக்க முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை சுமார் 55,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

சூடான் மோதல் நீடிக்கக்கூடும்

இராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் RSF என்ற துணை இராணுவப் படை ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் (Khartoum) உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக துணை இராணுவப் படை அறிவித்தது. இதனால் கார்டோமில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. அதன்பின், நாடு முழுவதும் கலவரமாக வெடித்தது இதில் 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், […]

தேசிய இப்தார் நிகழ்வு

முஸ்லிங்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக […]

100 % பெறுவது இன்னும் சாத்தியமில்லை – திமுத்

திறமையான அணியொன்று இருந்தும் அவர்களின் திறமைகளை 100 வீதமாக பெறுவது இன்னும் சாத்தியமில்லை என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20க்கு பிறகு Galle Face பகுதி மாறும்

Galle Face பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் 6.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் Galle […]

மாணவர்களிடையே பரவும் நோய்…

பாடசாலை விடுமுறை முடிந்து சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது வழமையாக காணப்படுவதால், நீரிழப்பைத் தவிர்க்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனை வலியுறுத்தியுள்ளார். அந்த நோய்களில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றும் வகையில் குழந்தைகளுக்கு இயற்கையான திரவங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிக அளவில் குடிக்கக் கொடுக்க வேண்டும் என்று டொக்டர் தீபால் கூறினார்.

“வசத் சிரிய 2023”: பரிசு மழை

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம். அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய” புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட வர்ணப் புகைப்படத்துடன் விண்ணப்பிப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 20-35 வயதெல்லைக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம். விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2023.04.20 ஆம் திகதி 3.00 […]

இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 1 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை அணி சார்ப்பில் திமுத் […]

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் நடைபவணி மற்றும் ஒன்றுகூடல்

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவணி மற்றும் ஒன்றுகூடல் என்பன கடந்த 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்றது. அத்துடன், பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியும் பகலிரவு, ஆட்டமாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார். இதன்போது அமைச்சருக்கு, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் […]