தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பதுளை மாவட்டத்தின் தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்று (17) காலை இந்த 9 கைதிகளும் தப்பி ஓடிவிட்டனர். நோன்பு நடவடிக்கைகளுக்காக தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அந்த அறையில் இருந்த இரும்பு கம்பியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதிகள் வழங்கிய தகவலின்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை […]
வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (18) அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. நுவரெலியாவிலிருந்து கண்டியை நோக்கி பயணித்த வாகனமொன்று இவரை மோதிவிட்டு, தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதிக இரத்தபோக்கு ஏற்பட்டதால் குறித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த விபத்து […]
ஜூலை முதல் நலன்புரிப் நன்மைகள்
நலன்புரிப் நன்மைகளை செலுத்தும் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதன்படி, உத்தேச நலத்திட்டங்கள் 01-07-2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மொத்த செலவு […]
பெருந்தோட்ட தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்
குறைந்த வருமானம் ஈட்டுவோரின் பட்டியலுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளீர்த்து அவர்களுக்கும் அரச வாழ்வாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டங்கள் அடங்கிய பதுளை, மொனராகலை, நுவரெலியாஇ கண்டிஇ மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்ட செயலாளர்களை, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் எழுத்துமூலம் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட செயலாளர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிவாரணம்இ சமுர்த்தி நிவாரணம் நோயாளர்களுக்கான நிவாரணம்இ குறை வருமானம் பெறுவோருக்கான நிவாரணம் […]
ஏப்ரல் 21 பேரணி: பேராயர்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து கட்டவாப்பிட்டி புனித செபஸ்தியார் பேராலயம் வரை பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தூதர் தாக்கப்பட்டுள்ளார்
சூடானின் கர்துன் நகரில் ஐரோப்பிய ஆணையத்தின் தூதர் தாக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலினால் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சூடானின் இராணுவத்திற்கும் மற்றொரு ஆயுதக் குழுவிற்கும் இடையில் மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் சுமார் 1,800 பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அரை சொகுசு பேருந்துகள் தொடர்பில் முடிவு?
அரை சொகுசு பேருந்துகள் அடுத்த மாதத்தின் பின்னர் ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். நுவரெலியா உள்ளிட்ட மத்திய சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மின்சார ரயில் பாதை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் அவகாசம்
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்தும் காலத்தை பங்களாதேஷ் மேலும் 06 மாதங்களுக்கு நீடித்துள்ளது. பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டாம் பகுதியை செப்டம்பர் மாதத்திலும் இலங்கை செலுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.
இலங்கை குரங்குகள் சீனா செல்லுமா?
அமைச்சவை அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே குரங்குகளை சீனாவுக்கு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் சீனாவில் சுமார் 1000 தனியார் மிருகக்காட்சிசாலைகளை நடத்தும் நிறுவனம் ஒன்று இலங்கை குரங்குகளை தமது மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.