வெயில் – 11 பேர் பலி
மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. நவி மும்பையில் […]
பாடசாலை விடுமுறை முடிந்தது..
அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த குமார் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. பாடசாலை நேர அட்டவணையின்படி, விடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
சியம்பலாபிட்டிய பயணித்த ஜீப் விபத்து
கேகாலை, அவிசாவளை பிரதான வீதி, ருவன்வெல்ல, வந்தல பிரதேசத்தில், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பயணித்த ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது, அமைச்சர் உட்பட 5 பேர் வாகனத்தில் இருந்தனர். இந்த விபத்தில் சியம்பலாபிட்டியவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, சிறு காயம் காரணமாக ராஜாங்க அமைச்சர் தற்போது கரவனெல்ல ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – ஜப்பான்
ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க மிகவும் ஆவலாக உள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தெற்காசியப் பிராந்தியத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் எமோட்டோ சச்சிகோ தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான JICA இன் அர்ப்பணிப்பை எமோட்டோ சச்சிகோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இராஜாங்க கல்வியமைச்சரின் அறிவிப்பு
திட்டமிட்டப்படி நாளை (17) சலல அரச பாடசாலைகளும் இயங்கும் என இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாளை பாடசாலைகள் திறக்கப்படாது என பரவிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் இராஜாங்க கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீன பயணம் தாமதமாகுமாம்?
இலங்கைக் குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்புவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், காரணம் கூறாமல் குரங்குகளை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்வது மிகவும் சிக்கலான நிலை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குரங்குகள் அநுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழும் இலங்கைக்கு சொந்தமான விலங்குக் குழுவாகும்.
நண்பா மோதுவோமா?
சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுவாகும். அயர்லாந்து அணி இதுவரை 04 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் அவர்களால் எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெற முடியவில்லை. இதேவேளை, அயர்லாந்துடனான இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதாக […]
நியூசிலாந்தை சுருட்டியது பாகிஸ்தான்
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் T20 நேற்று லாகூரில் நடைபெற்றது. அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிரடியாக ஆடிய சயிம் அயூப் 28 பந்தில் 47 ரன்னும், பகர் சமான் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பஹீம் அஷ்ரப் 22 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் மேட் […]
காலிக்கு வரும்போது, வீட்டைப் போல உணர்கிறோம் : திமுத்
இலங்கை அணிக்கும் சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை (16) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இரண்டு போட்டிகளைக் கொண்டது. அதன்படி, இலங்கை அணியினர் நேற்றும் (14) இன்றும் (15) பயிற்சிகளில் ஈடுபட்டனர் தலைவர் திமுத் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் காலிக்கு வரும்போது வீட்டைப் போல உணர்கிறோம் வானிலை பற்றி சொல்ல முடியாது. நாங்கள் செய்யக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பேருந்து கவிழ்ந்ததில் 12 பேர் பலி…
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் மும்பை – புனே நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மும்பை-புனே வழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் கலாசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.