அமெரிக்காவின் ஆதரவு…
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன், இலங்கையின் கடனாளிகள் தமது கடனை உரிய காலத்தில் மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியமை மற்றும் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலின் வலுவான உள்ளுர் உரிமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை முறையாகவும் திறமையாகவும் கையாள வேண்டும்
நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை முறையாகவும் திறமையாகவும் கையாள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்சின் பெரிஸில் ஆரம்பமான புதிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டுடன் இணைந்து இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு போன்ற சவால்களை முறையான மற்றும் வினைத்திறனுடன் கையாள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையில் கடன் […]
அமரர்.முத்து சிவலிங்கம் பலமாக இருந்தார் – ஜீவன்
” இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர். முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23)நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர். முத்து சிவலிங்கத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் […]
ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் எனவும், பாடசாலையின் கல்வி பெறுபேறுகள் தற்போது சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். “இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 15 ஆசிரியர்களில் […]
மலையக ரயில் சேவை வழமைக்கு
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று 23.06.2023 காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், 23.06.2023 அன்று மதியம் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொட ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் 118 ¼ மைல் பகுதியிலேயே இவ்வாறு தடம் புரண்டிருந்தமை குறிப்பிடதக்கது. (க.கிஷாந்தன்)
இலங்கை அணிக்கு சூப்பர் வெற்றி
ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி களம் இறங்கிய ஓமான் அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஓமான் அணி சார்பாக அதிக ஓட்டங்களாக 41 ஓட்டங்களை Ayaan Khan பெற்றார். இலங்கை அணி சார்பாக Wanindu Hasaranga, […]
கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை மூலம் செய்ய முடியாது
இலங்கையின் கடன் மறுசீரமைப்பை ஒரு பிணைப்பு செயல்முறை அல்லது பொதுவான பொறிமுறையின் மூலம் செய்ய முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “தற்போதைய உலகம் எதிர்நோக்கும் நெருக்கடியான சவால்களுக்கு தீர்வு காண்பது” என்ற தொனிப்பொருளில் பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் நீர்மூழ்கி: சடலங்களை கண்டுபிடிப்பது கடினம்
டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை ஆய்வு செய்து கொண்டிருந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி அதில் இருந்த ஐந்து பயணிகளும் இறந்ததை அமெரிக்க கடலோர காவற்படை உறுதி செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இறந்தவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பது கடினம் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு சிறிய அளவிலான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலுடன் போலார் பிரின்ஸ் கப்பல் கிழக்கு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணத்தைத் தொடங்கியமை குறிப்பிடதக்கது.
இந்தியா வளரும்போது உலகம் சேர்ந்தே வளரும்
இந்தியா வளரும்போது ஒட்டுமொத்த உலகம் முழுவதும் சேர்ந்தே வளரும் என அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள மோடி ஜனாதிபதி பைடன் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தில் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் சமீபத்திய நிலைமையை IMF விளக்குகிறது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை பாரிஸ் உச்சி மாநாட்டுடன் இணைந்து சந்தித்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க அரசின் வலுவான முயற்சிகளால் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக நிதி நிதி தொடர்ந்து உறுதியளிக்கும் என்றும் கூறினார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில் பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். ஜூன் 22 மற்றும் […]