நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் நடைபெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முதலீட்டு சபை அதிகாரிகள், கொழும்பு துறைமுக நகர் ஆணையாளர், பெருந்தோட்ட மனித […]

டைடான்க்கை தேட சென்றவர்கள் பற்றிய கவலையான செய்தி

டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க கடலோர கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் இருந்த போது அழுத்தம் காரணமாக பயங்கரமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்து இருக்கலாம் […]

எதிர்வரும் நாட்களில் விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் நளின்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த சலுகைகளின் நலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் […]

நல்லிணக்க முயற்சிகள் தொடரும்: ஜனாதிபதி

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க […]

சீன-அமெரிக்க பிரச்சினைக்கு ரஷ்யாவும் பதிலடி

அமெரிக்க – சீன உறவைவ பேண பிளிங்கன் முயற்சிககும் போது அதற்கு விரோதமாக ஜனாதிபதி பைடன் செயற்படுவது நல்லதல்ல என ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் தெரிவித்துள்ளார். பைடன் போக்கை புரிந்துக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பைடனின் கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ரஷ்ய வெளியுறவு பேச்சாளர் கூறியுள்ளார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ஜனாதிபதி பைடனின்  கூற்றில் தனக்கு உடன்பாடு இல்லை என்று  கூறியுள்ளார். சீனாவில் எந்த மாதிரியான அரசு அமைய வேண்டும் என்பதை சீன […]

உலகில் வாழத் தகுதியான 10 நகரங்கள்…

உலகில் வாழத் தகுதியான நகரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கையை “”The Economist”” வெளியிட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரியாவின் வியன்னா நகரம், உலகில் வாழத் தகுதியான நகரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் போது, ​​உலகின் 173 நகரங்கள் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, சுகாதாரம், கல்வி, ஸ்திரத்தன்மை  உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய காரணிகள் அந்தந்த தரவரிசைக்கு பயன்படுத்தப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் கனடாவின் கல்கரி, சுவிட்சர்லாந்தின் […]

முதலாம் ஆண்டுக்கான புதிய பாடம்

ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர், அமைச்சரவை ஊடாக இதற்கான விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதன்படி எதிர்காலத்தில் கல்வி அமைச்சுடன் இணைந்து சிறுவர்களுக்கு ஜப்பானிய மொழியை கற்பிப்பது தொடர்பான செயற்பாடுகள் தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜப்பானிய சந்தையை இலக்காகக் […]

பைடன் இந்தியா தொடர்பில் அதிரடி முடிவு

இந்தியர்கள் அமெரிக்கா வந்து பணிபுரிந்து குடியேறுவதை எளிதாக்க பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் தொடர்பாக, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சில இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியும். அது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (22) வெளியிடவுள்ளது. அதன்படி, எச்-1பி விசாவில் நாட்டிற்குள் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் போதே […]

சீனாவில் உணவகம் ஒன்றில் வெடி விபத்து

சீனாவின் வடமேற்கு நகரமான யின்சுவானில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்த ஏழு பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 8.40 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. பார்பிக்யூ உணவகம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. திரவ எரிவாயு கசிவு காரணமாக இந்த […]

இசை நிகழ்ச்சிகளை முடிப்பதற்கான நேரம்…

இசை நிகழ்ச்சிகளுக்கான இரவு 10 மணி வரையிலான காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மத ஸ்தலங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நியாயமான தூரத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.