உலக வங்கி அதிர்ச்சி தகவல்
இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் ஈராண்டுகளுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம் 2021ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வறுமை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றது. நாட்டின் வறுமை நிலை 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 13.1 வீதத்திலிருந்து 25 வீதம் வரை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை […]
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் வௌியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, எல்பிட்டிய, யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவுகள் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, றம்புக்கனை, தெரணியகலை, மாவனெல்லை, கேகாலை, கலிகமுவ பிரதேச செயலக பிரிவுகள் குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம, மாவத்தகம, அலவ்வ, பொல்கஹவெல பிரதேச […]
நுவரெலியாவில் கட்டுமானத்திற்கு வரையறையாம்
நுவரெலியா மாவட்டத்தில் 04 மாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் […]
பசறை-நமுனுகுல வீதியில் போக்குவரத்து தடை
மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகல மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலைமைகளின் கீழ், […]
‘ப்றொடெக்ட்’ போராட்டம்
(க.கிஷாந்தன்) மே தினத்தை முன்னிட்டு முறைசாரா துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம் ஹட்டனில் இன்று நடைபெற்றது. அட்டன் மல்லியப்பு சந்தியில் ‘ப்றொடெக்ட்’ சங்கத்தின் மே தின கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. ‘உரிமைகளை வென்றெடுக்க ஒன்றினைவோம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ப்றொடெக்ட் தொழிற்சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் 100ற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். […]
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்: அரவிந்தகுமார்
நாட்டின் தேசிய வருமாaaனத்தின் பங்காளிகளான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது அதனையே நாமும் வலியுறுத்தி நிற்கிறோம். அடுத்து வரும் மேதினமானது மலையகத்தில் மாற்றங்களை ஏபடுத்தியிருக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மேதினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகத்தை பூர்வீகமாகக் கொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்திய வம்சாவளியினராக […]
சூரிய ஔி உடலுக்கு அவசியம்
நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். விட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். சூரிய ஔியின் மூலமே மனித […]
சூடானில் தொடர்ந்து பதற்றமான சூழல்
கடந்த 4 நாட்களில் 4,000க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையைச் சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை விமானம் மற்றும் கடல் மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார மோதல் தற்போது […]
மியான்மர் தேர்தல் ஆணைய அதிகாரி கொலை
மியான்மர் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டின் தேர்தல் ஆணையத்தின் பிரதித் தலைவர் யாங்கூனில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவப் பிரிவினரே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இதுவரையில் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத்தில் நோன்பு பெருநாள்
ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா. இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகின்றது. முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்தவகையில் மலையகத்தில் […]