ஒன்றிணைந்து பயணிப்போம்

பல்லின சமூகம் வாழும் இலங்கை திருநாட்டில், பொருளாதாரம் மேம்பட்டு – பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் இன ஒற்றுமையும், மத நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். எனவே, இலங்கை தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” இலங்கையில் முடியாட்சியின் போதும் சரி குடியாட்சியின் […]

பொருளாதார முகாமைத்துவக் கொள்கை அடுத்த மாதத்திற்குள் இறுதி செய்யப்படும்

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை அடுத்த மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். சிறந்த வர்த்தகர்கள் 40 பேரை கௌரவிக்கும் முகமாக  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “பிசினஸ் டுடே” விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிப்பது தொடர்பில் எந்தவித முடிவும் இல்லை

ஏப்ரல் 25ம் திகதி  நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணையை கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனொ கணேசன் அறிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள மின்னஞ்சலில்… இது திரித்து கூறப்படும் பொய்யான செய்தி. இது, ஆளுந்தரப்பில் இருந்து எதிரணிக்கு வந்துள்ள ஒரு முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இணைய தளத்திலேயே முதலில் இச்செய்தி வந்தது. ஐக்கிய மக்கள் கூட்டணிசக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியாகவே தற்போது […]

மீன்கள் திடீரென உயிரிழப்பு

கொத்மலை ஓயாவில் மீன்கள் இறந்த நிலையில் மிதப்பதாகவும், அவற்றை உணவுக்காக எடுக்க வேண்டாம் எனவும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பேவெல முதல் மெரயா, எல்ஜின், அக்கரகந்த வரையான ஆற்றில் சுமார் 12 கிலோ மீற்றர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதக்கின்றன. இந்நிலையில் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும், தோட்டத் தொழிலாளர்கள் இறந்த மீன்களை எடுத்துச்செல்கின்றனர் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என […]

மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் – VS

புத்தாண்டில் மலையக மக்களின் இன்னல்கள் அகலட்டும் என பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி என்ற சுமை அகன்று யாவரும் நலம் பெற்று நாட்டை மீட்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கியமாக மலையக மக்களின் வாழ்விலும் நெருக்கடியான சூழ்நிலைகள் விலகி அவர்களின் எதிர்பார்ப்புகள் ஈடேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்களும் ரெடி…

நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், உத்தராயண புண்ணிய கால வசந்த ருதுவில் பிருகு வாரமாகிய வெள்ளிக்கிழமையில் 14.4.2023 கிருஷ்ணபட்சத்து நவமி திதியில் மேல்நோக்குள்ள திருவோணம் நட்சத்திரம் 2-ம் பாதத்திலும் மகர ராசியில் சிம்மம் லக்னத்திலும், சுக்கிரன் ஓரையிலும், மந்தயோகத்திலும் சந்திர மகாதசையில் ராகு புத்தி, ராகு அந்தரத்திலும், சகல செல்வங்களையும் தரப்போகும் சோபகிருது ஆண்டு மதியம் 1.57 மணிக்கும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மதியம் 2.59 மணிக்கும் பிறக்கிறது. சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை […]

சித்திரைக்காக 13 ஆம் திகதியும் பஸ்கள்…

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று விசேட தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீண்ட தூர சேவைப் பேருந்துகள் வழமை போன்று இயங்கும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை […]

இலங்கைக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை

இலங்கையில் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கான அவசரப் பிரேரணையை சமர்ப்பிக்க  எதிர்பார்ப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எலன் கூறியுள்ளார். குறைந்த வருமானம் கொண்ட இலங்கை உள்ளிட்ட நடுத்தர வருமான நாடுகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அமெரிக்க திறைசேரி செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்டிகை காலத்தில் போக்குவரத்துக்கு 7000 பேருந்துகள்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தநிலான் மிராண்டா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம், நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்திற்காக 7000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

IPL வீரர்களுக்கு எச்சரிக்கை

இந்தியவில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் BCCI 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியவில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியவில்  25,587 பேர் தொற்று பாதிப்புடன் […]