உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக்’ தொடர்பான ஐஎம்எப் அறிக்கை:

2022-ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும். இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும்.

ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருபெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மற்றும் சீனா உள்ளன. நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் இப்பிராந்தியங்களின் வளர்ச்சி ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். இருப்பினும் உலகப் பொருளாதாரத்துக்கு 2023-ம் ஆண்டு சவாலானதாகவே இருக்கும் என தெரிகிறது.

பணவியல் கொள்கையில் இறுக்கம், உக்ரைன் போர் ஆகியவை உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *