IPL தொடரின் இறுதிப்போட்டிக்கு GT அணி தகுதி பெற்றுள்ளது.
தொடரின் பிளே Off சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி GT இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று-2 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
இதன்மூலம், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மே 28 ம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் குஜராத் அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.