“மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்” என் தோனி தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே Off போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோனி மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்
“இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை. பிராவோ போன்ற உதவியாளர்கள் இந்த விஷயத்தில் பக்க பலமாக உள்ளனர்.
பீல்டிங் செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டன்தான் என்று நினைக்கிறேன்.
என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டே நான் செயல்படுகிறேன். பீல்டிங் செய்பவர்கள் என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன்.
கேட்சை தவறவிட்டால் என்னிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. அப்போதும் பீல்டர்கள் என் மீது ஒரு கண் வைத்து கொள்ள சொல்வேன்” என்று பேசினார் தோனி.
அப்போது வர்ணனையாளர் அடுத்த சீசனில் விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “அது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதை முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை எடுக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும்சொல்கிறேன். மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன்” என்று தோனி உறுதிபட கூறினார்.