JEDB பெருந்தோட்ட யாக்கம் ளுடுளுPஊ மற்றும் எல்கடுவ பிளான்டேஷன் நிறுவன அதிகாரிகளுக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரொமேஷ் பத்திரன நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தினுடைய முக்கிய உத்தியோகஸ்தர்கள் விஜயகுமார் தியாகராஜ் கிருஷ்ணகுமார் தாண்டவன் புவனேந்திரன் இடையிலான கலந்துரையாடல் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மற்றும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்
அரசாங்கத்திற்கு கீழ் இயங்கும் துநுனுடீ பெருந்தோட்டயாக்கம் ளுடுளுPஊ. எல்கடுவ பிளான்டேஷன் நிறுவனங்களில் தொழில் புரிகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் முறையற்ற முகாமைத்துவத்தின் விளைவாக பாதிப்படைந்துள்ளனர்.
அந் நிறுவனங்களின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் பல வருட காலமாக ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி செலுத்தப்படாமை மேலும் மௌஜின்இ கலபொட இமாவிலை இ ரொக்வுட் இநாகஸ்தன்ன தோட்ட காணிகளை வெளியாருக்கு முறையற்ற ரீதியில் பகிர்ந்துஅளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு தெளிவூட்டியதுடன் பெருந்தோட்ட காணிகளை தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் 30 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம் 200 வருட காலமாக இந்நாட்டினுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்கள் என்ற ரீதியில் குத்தகைக்கு காணிகள் வழங்கப்படும் போது எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படக்கூடாது என்ற கோரிக்கையையும் முன் வைத்தோம்
மேலும் கூடிய விரைவில் அவர்களுடைய ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எக்காரணத்தைக் கொண்டேனும் அங்குள்ள மக்களை வெளியேற்ற கூடாது . நாட்டினுடைய தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றைய பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றது