ஸ்ரீலங்கா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் அபுதாபி T10 போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுப்பட முயன்ற குற்றச் சாட்டில் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு எதிராக தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
33 வயதான டெவோன் தோமஸ் என்பவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ICC ஊழல் தடுப்புச் சட்டங்களின்படி, தோமஸ் மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, மேலும் அவர் பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் உள்ளது.
2021 ஆம் ஆண்டில், அவர் “கேண்டி வாரியர்ஸ்” அணிக்காக விளையாடினார்,
அப்போது அவர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடதக்கது