LPL2023 ன் 20 வது T2போட்டி இன்று நடைப்பெற்றது.கொழும்பு ஸ்ரைக்கஸ் காலி டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதிகான் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படும் இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது.
இந்நிலையில் இரண்டு அணிகளும் இன்று மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி எதிர் அணியான கொழும்பு அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதன்படி 15.4 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. LPL சரித்திரத்தில் ஒரு அணி பெற்ற ஆக குறைந்த ஓட்டங்கள் இதுவாகும்.
டப்ராஸ் ஸம்ஸி மற்றும் லாஹிரு குமார ஆகியோரின் பந்தை எதிர்நோக்க முடியாமல் கொழும்பு அணி திணறியது.
ஸம்ஸி 4-0-20-4 , லாஹிரு குமார 2 – 0-9-2 விக்கெட்டுகள்.
Shamsi’s spin left the Strikers in ruins!
Be part of the action. Get your tickets now!
Book online via BookMyShow 👉https://t.co/leccAIrFVZ#LPL2023 #LiveTheAction pic.twitter.com/PnY9IvXFNA
— LPL – Lanka Premier League (@LPLT20) August 15, 2023
வெற்றி இலக்கான 75 ஓட்டங்களை பெறும் முகமாக ஆடுகளம் நுழைந்த காலி அணி 8 .3 ழவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 75. ஓட்டங்களை பெற்று ஓட்ட வீதத்தில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றது. இதில் லசாத் கொரோசபுள்ளே 42 ஓட்டங்களையும் , சகீப் ஹல் ஹசன் 17 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள்.
காலி அணியின் துடுப்பாட்ட வீரரான லிட்டன் தாஸ் அடித்த பந்தை நுவிந்து பெர்ணான்டோ தூரம் ஓடி வந்து அந்தரத்தில் பறந்த பிடித்தார்.
LPL2023 போட்டிகளில் பிடிகப்பட்ட கெட்ச்களில் சிறப்பானதாக இதை கருதலாம.
ஆட்டநாயகனாக ஸம்ஸி தெரிவானார்.