அவுஸ்திரேலியாவின் Melbourne நகரில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 9 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
45 சிறார்களுடன் பயணித்த பஸ்ஸை பின்னால் வந்த ட்ரக் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 5 தொடக்கம் 11 வயதுக்கிடைப்பட்ட 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
9 மாணவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனவும் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
49 வயதான பஸ்ஸின் சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.