இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும்…
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை முற்கூட்டியே நடத்துவதற்கும் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தும் எனும் உறுதிப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கியுள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதனிடையே, இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் அந்த விடயம் சார்ந்த செயற்பாடுகளின் நிலைமை குறித்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் […]