இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு…
வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் தலிபான் அதிகாரிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.