இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி

உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மற்றுமொரு போட்டி இன்று (27) நடைபெறவுள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டி புலவாயோவில் தொடங்க உள்ளது. இதுவரை இலங்கை அணி தாம் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.