உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யா
அதிபர் விளாடிமிர் புதின் வசிக்கும் மாளிகை மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்” பதிலடி கொடுக்க தமக்கு உரிமை உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்றிரவு மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. அத்துடன், அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல அவை ஏவப்பட்டிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஒரு சிறிய வெடிப்புடன் கிரெம்லினில் ஏதோ […]