உலக அளவில் போருக்கான செலவினம் உயர்வு

உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக உலக அளவில் போருக்கான செலவினம் உயர்ந்துள்ளது. உக்ரைனின் இராணுவச் செலவு கடந்த ஆண்டு 640 சதவீதம் அதிகரித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அவர்கள் போருக்காகச் செலவிட்ட மிக அதிக செலவு இது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் போர்ச் செலவுகள் மிகவும் பாதுகாப்பற்ற உலகத்தை உருவாக்கியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 30 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த இராணுவ செலவினமாகும்.