கச்சத்தீவை போல காவிரியை தாரைவார்க்க தயாராகிவிட்டீர்களா?
“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது போல் இப்போது காவிரியையும் தாரை வார்க்க தயாராகி விட்டீர்களா?” என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் […]