வேட்புமனு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 85 வேட்புமனுக்கள், சுயேட்சைக்குழுக்களின் 6 வேட்பு மனுக்கள் உள்ளடங்கலாக 91 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். நுவரெலியா மாநகர சபைக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 10 வேட்பு மனுக்களில் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், […]