டெங்கு: சூழலை துப்பரவாக வைத்துக்கொள்தல் அவசியம்
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மழையுடனான வானிலையுடன் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவுவதால், பொதுமக்கள் தத்தம் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்தல் அவசியம் என டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.