தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் துரைசாமி விஜிந்த் மூன்று பதக்கங்கள் சுவீகரிப்பு

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற சர்வதேச தெற்காசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக சென்ற நுவரெலியா மாவட்ட பூண்டுலோயா பகுதியை சேர்ந்த துரைசாமி விஜிந்த் இண்டு தங்கப்பதக்கங்கள் ஒரு வெள்ளிப்பதக்கம் அடங்கலாக மூன்று பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளார். வேகநடை போட்டி மற்றும் பரிதிவட்டம் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கமும் சுற்றி எரிதல் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் வெற்றி பெற்றுள்ளார்.குறித்த போட்டியில் இலங்கை உட்பட இந்தியா,பூட்டான்,பங்களாதேஷ்,நேபாள் போன்ற நாடுகள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.