தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து முத்தரப்பு பேச்சு

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின், நிர்வாகத்திடம் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் எனவும் இ.தொ.கா எடுத்துரைத்துள்ளது. இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையிலான நேரடி கலந்துரையாடலொன்று இராகலை நகரிலுள்ள கலாசார மண்டபத்தில் […]