நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற சந்தேகநபர் கைது
அட்டன் பகுதியில் அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி மணல் கொண்டு சென்ற லொறியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அட்டன் பொலிஸாரினால் இவர் 26.04.2023 அன்று மாலை அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மணலை அனுமதி பத்திரத்தின் நிபந்தனைகளை மீறி (அனுமதிப்பத்திரத்தில் திகதி தெளிவாக குறிப்பிடவில்லை) கித்துல்கல பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு கொண்டு செல்லும் போது அட்டன் பொலிஸாரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. அதன்பின் கைப்பற்றப்பட்ட மணலையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் அட்டன் பொலிஸ் நிலையத்தில் அட்டன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். சந்தேகத்தின் […]