நெடுந்தீவு கொலை – 6வது பலி
யாழ்.நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறித்த […]