பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் – வீதிகள் அதற்கு மாற்று வழியல்ல (Photos)

மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் விரைவில் சாதகமான முடிவுகள் கிடைக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி. பொருளாதார வீழ்ச்சியின் ஊடாகவும் நாடுகள் அராஜக நிலைக்கு மாறும் என்றும், எனவே ஒரு நாட்டின் அரசியலமைப்பைப் போன்று, பொருளாதாரத்தையும் ஒருசேர பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். திருகோணமலை விமானப்படை தளத்தில், இன்று (03) முற்பகல் […]