மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி
மண் மேடு சரிந்து விழுந்ததில் இருவர் புதையுண்டுள்ளனர். நுவரெலியா வெடமன் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றுக்கு அருகில் சுவரைத் தயார்படுத்தும் போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் இடிந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 23 மற்றும் 43 வயதுடைய பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.