மோதல்களுக்கு மத்தியில் புடின் எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய வாக்னர் கூலிப்படையின் தலைவர் அந்நாட்டு இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை அறிவித்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரஷ்ய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலான நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொண்டுள்ளது.