ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம்?

கடந்த வார இறுதியில் வாக்னரின் படைகள் ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைக் கைப்பற்றியபோது உலகமே அதிர்ச்சியடைந்தது. இது உலக மசகு எண்ணெய் சந்தையையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இன்று (26) மசகு எண்ணெய் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ரஷ்ய ரூபிளின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. கூலிப்படை தாக்குதல்கள் ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.