ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன், செனன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடும் 15 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செனன் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் எனவும், பாடசாலையின் கல்வி பெறுபேறுகள் தற்போது சிறந்த மட்டத்தில் இருப்பதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர். “இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள 15 ஆசிரியர்களில் […]