அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
ஒற்றையாட்சி அரசில், அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டின் இன்றைய நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்தார்.