தேர்தலுக்கு பயமில்லை முடிவுகளுக்கே பயம்
அரசாங்கம் தேர்தல் முடிவுகளுக்கு பயந்தே உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்தவில்லை எனமக்கள் விடுதலை முன்ணணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க் பாராளுமன்றில் இன்று (10) உரையாற்றறும் போது இதனை கூறினார். ஆகவே எப்படியாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு- அநுர
100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஓட மக்கள் விடுதலை முன்னணி ஆயத்தமில்லை எனவும் மாறாக மரத்தன் ஓட்டப் போட்டியில் கலநந்துக்கொள்வதே எதிர்ப்பார்ப்பு எனவும் அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தேர்தலை பிற் போடுவதால் வீட்டுக்கு சென்று தூங்குவார்கள் என்று ஜனாதிபதி எண்ணினால் அது அவரின் பரிதாப நிலை எனவும் அவர் விமர்சித்தார்.