அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்
“அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.