அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

அமெரிக்காவின் வோசிங்டனில் இசை நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெற்ற பூங்காவிற்குள் நுழைந்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போதிலும் இசை நிகழ்ச்சி தொடர்ந்து […]

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்தனர். இது தவிர மேலும் சுமார் 07 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரியும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.