அமைச்சரவை அங்கீகாரம்
நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு… 01. பங்களாதேசத்துடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற தொடர்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் சந்தைத் தடைகளை நீக்கி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை அணுகலுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், உள்ளூர் விநியோகம் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு இணையாக இலங்கை மற்றும் பங்களாதேசத்திற்கும் இடையில் முன்னுரிமை […]