இந்தியாவில் பேருந்து கவிழ்ந்ததில் 12 பேர் பலி…
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்காட் மாவட்டத்தின் மும்பை – புனே நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். மும்பை-புனே வழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பேருந்தில் கலாசாரக் குழுவைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.